நெல்லை மாவட்டத்தில் 20வயது இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்…

நெல்லை: திரு நெல்வெலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திர பகுதியில் வசித்து வருகிறார் இசக்கியம்மாள் (வயது20). இவரது கணவர் சுரேஷ் (வயது 26).கர்ப்பமாக இருந்த இசக்கியம்மாள்,  பிரசவ வலி காரணமாக,  நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டதில், அவரது வயிற்றில் 4 குழந்தைகள் இருப்பது தெரிய வந்தது.  மேலும், அந்த இளம்பெண்ணின் உடல்நிலை,  சுகப்பிரசவம் நடைபெற வாய்ப்பு இல்லை என்பதை அறிந்த மருத்துவர்கள் உடடினயாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

அதையடுத்து,  அந்த இளம்பெண்ணுக்கு 2 ஆண் குழந்தை மற்றும் 2 பெண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தையின் எடை மிக்குறைவாக இருந்தால், உடனே இன்குபேட்டரில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.  தற்போது குழந்தைகள் மற்றும் தாயின் உடல்நிலை சீராகி வருவதாக,  பிரசவம் பார்த்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

வெற்றிகரமாக நான்கு குழந்தையை காப்பாற்றியதால் மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இதே போல் தான் கொரோனா தொற்று இருந்த 23 வயது பெண்ணுக்கும் சமீபத்தில்  ஒரே பிரசவத்தில் மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது.