15ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரசவம் பார்த்த 98வயது மூதாட்டி காலமானார்

பெங்களூரு:

ர்நாடக மாநிலத்தில் 70 ஆண்டுகளாக மருத்துவச்சியாக சேவையாற்றி   சுமார் 15 ஆயிரத்துக் கும் மேற்பட்ட பிரசவங்களை பார்த்துள்ள 98 வயது மூதாட்டி நரசம்மா காலமானார்.

கர்நாடகா மாநிலம் கிருஷ்ணபுரா பகுதிகளை சேர்ந்தவர்  நரசம்மா. இவருக்கு 98 வயது ஆகிறது. இவர் வாழ்ந்து வந்த பகுதி கிராமப்பகுதி என்பதால் அங்குள்ளவர்கள்  பிரசவத்துக்காக மருத்துவ மனையை நாடுவது கிடையாது. கிராமப்புறங்களில் உள்ள மருத்துவச்சி எனப்படும்  பெண்கள் உதவியுடன்தான் பிரசவங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நரசம்மா தனது சிறுவயது முதலே அந்த பகுதியில் உள்ள பெண்களுக்கு பிரசவம் பார்த்து வருகிறார். கடந்த 70 ஆண்டுகளாக அவர் பிரசவம் பார்த்து வந்ததாகவும்,  சுமார் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு அவர் பிரசவம் பார்த்து, குழந்தைகள் நலமுடன் பிறந்துள்ளதாகவும்  கூறப்படுகிறது.

வயது முதிர்வு காரணமாக நோய்வாய்ப்பட்ட நரசம்மா கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி காலமானார்.

நரசம்மாவின் சேவையை பாராட்டி  கடந்த 2012-ம் ஆண்டு  ‘இந்தியாவின் சிறந்த குடிமகள்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. பின்னர் நரசம்மராவுக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.