சாலையில் தூக்கி வீசப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம்: ராஜஸ்தானில் பரபரப்பு

ஜெய்ப்பூர்:

நேற்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த ராஜஸ்தான் மாநிலத்தில், வாக்குப்பதிவு இயந்தி ரம் சாலையில் வீசப்பட்டிருந்தது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சாலையில் கிடந்த வாக்குப்பதிவு இயந்திரம்

200 தொகுதிகள் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடை பெற்றது. வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் முடிவடைந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரம் மூடி சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிகை நடைபெறும் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில்,  பரன் மாவட்டம் கிஷன்கஞ்ச் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஷகாபாத் பகுதி யில் ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சாலையில் கேட்பாரற்றுக் கிடந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

வாகனங்களில் ஏற்றப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் சாலைக்கு எப்படி வந்தது என்பது கேள்விக் குறியாக்கப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பாதுகாப்பாக காவல்துறையினர் செல்லும் நிலையில், இயந்திரம் சாலையோரம் தூக்கி வீசப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு சென்று அந்த வாக்கு எந்திரத்தை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். இது சம்பந்தமாக  2 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.