Random image

‘அரசுக்கே அதிகாரம்’: உச்சநீதி மன்ற தீர்ப்பால் ஜனநாயகம் வென்றது! கெஜ்ரிவால்

டில்லி:

ச்சநீதி மன்ற தீர்ப்பு காரணமாக, டில்லியில் மாநில அரசுக்கே அதிகாரம் என்பது தெளிவாகி உள்ளது என்றும், ஜனநாயகம் வென்றது என்றும் டில்லி மாநில முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.

தலைநகர் டில்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கும்,  மத்திய அரசால் நியமிக்கப்படும் கவர்னர்களுக்கும் இடையே அதிகார  மோதல் நீடித்து வந்தது. இது தொடர்பான வழக்கில், மாநில அரசுக்கு அதிகாரம் என்று உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்புக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில்,  தீர்ப்பு குறித்து டில்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது டுவிட்டர் பக்கத்தில், “டெல்லி மக்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. இது, ஜனநாயகத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி”  என்று  பதிவிட்டுள்ளார்.

தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள டில்லி துணைமுதல்வர் மனிஷ் சிசோடியா, “உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் இது ஒரு மைல்கல். டில்லி அரசு, இனி எந்தக் கோப்புகளையும் துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்ககாக அனுப்பி வைக்காது. இனி எந்த வேலை நிறுத்தமும் நடைபெறாது. இது, ஜனநாயகத் துக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி. உச்ச நீதிமன்றத்துக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ஆளுநரின் அதிகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு  டிசம்பர் மாதம் அரசு மற்றும் ஆளுநர் தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.