அமெரிக்கா: மனைவி, மகனை கொன்று, தற்கொலை செய்துகொண்ட கோடீஸ்வரர்

தந்தையல் கொல்லப்பட்ட ஜேம்ஸ்அமெரிக்காவில் கோடீசுவரர் ஒருவர் தனது மனைவி மகனை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் உள்ள  வெர்ஜீனியா மாகாணத்தின் மெக் லீன் பகுதியைச் சேர்ந்தவர் ஹாங் சென்.  பெரும் கோடீசுவரர். இவர் தனது மனைவி ஷெர்லே சோவ் மற்றும் 16 வயது மகன் ஜேம்ஸ் ஆகியோரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார். ஜன்னல் வழியாக பிரேதங்களைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர், காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

தற்போது காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். “ஹாங் சென் பெரும் பணக்காரர். அவரது வீட்டின் மதிப்பு மட்டுமே 1200 மில்லியன் டாலர். ஆகவே இந்த மரணங்களுக்கு வேறு யாராதவது காரணமாக இருக்கலாமோ என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம்” என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.