நடிகைகள் சாவித்ரி, சில்க் ஸ்மிதா, ஷகீலா ஆகியோரின் வாழ்க்கை சினிமா படமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் நடிகை சுமலதாவின் வாழ்க்கை வரலாறும் சினிமாவாக தயாரிக்கப்பட உள்ளது.

ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை, சுமலதாவை தமிழகமெங்கும் கொண்டு போய் சேர்த்தது.

தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

கன்னடத்தில் புகழ் பெற்று விளங்கிய நடிகர் அம்பரீஷை , காதல் திருமணம் செய்து கொண்டவர், சுமலதா.

அம்பரீஷ், மரணம் அடைந்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மாண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு, வெற்றி பெற்றார், சுமலதா.

அவரது வாழ்க்கையை டி.வி.தொடருக்காக சினிமாவாக தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார், குருதேஷ் பாண்டே என்பவர். இந்த தொடரை அவரே டைரக்டு செய்கிறார்.

சுமலதாவின் சினிமா வாழ்க்கையில் ஆரம்பித்து அரசியல் வாழ்க்கையில் முடிவதாக பின்னப்பட்டுள்ள இந்த சினிமா, 15 எபிசோடுகளாக ஒளிபரப்பாகும்.

– பா. பாரதி