புற்றுநோயையும் கட்டியையும் இரத்தச் சோதனைமூலம் கண்டறியும் கருவி: விஞ்ஞானிகள் சாதனை


பொதுவாக நம் உடலில் மரபணு செல்களில் (டி.என்.ஏ.) ‘டியாக்சிரிபோநியூக்ளிக்’ என்ற அமிலம் உள்ளது. இது உயிர்களின் உருவாக்கத்திற்கும் நீடித்த ஆயுளுக்கும் குறிப்பிடத் தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. மரபணுச் செல்கள் ஒன்று, இரண்டாகவும், இரண்டு நான்காகவும் பிரியும்போது இந்த அமிலம் ஒவ்வொரு செல்லிலும் இடம் பெற வேண்டும். அதற்கேற்ப மூலக்கூறு செல்கள் இந்த அமிலத்தை உருவாக்கும். இவ்வாறு அமிலத்தை உருவாக்கத் தவறும்போது அமிலம் இல்லாத செல்கள் அழியும் அல்லது தவறான பரிமாணத்தை அடையும். இந்தக் குறைபாடு புற்றுநோய், முதுமை போன்றவற்றுக்கு ஒரு காரணம். புற்றுநோய் மிகவும் வலியை ஏற்படுத்தும்.

புற்றுநோய் வலியேற்படுத்துவது ஒருபுறம், அதற்கான சிகிச்சையின்போது ஏற்படு வலி சற்றும் குறைவானதல்ல.
எந்த புற்றுநோயில் இருந்து உயிர் பிழைத்து வந்தவர்களிடம் நாம் அவரது அனுபவம்குறித்து கேட்போமேயானால், தன் உடலில் இருது கேன்சர் கட்டியை அகற்றும்போது தான் அனுபவித்த ரணத்தை தன் எதிரி கூட அனுபவிக்கக் கூடாது என்றுதான் கூறுவர்.
ஒரு புற்றுநோய் கட்டி தன் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களை, உடலின் உள்ள மற்ற சாதாரண செல்களிடம் போட்டி போட்டுக் எடுத்துக் கொளவதுடன், சாதாரண செல்களை அதன் வீரியம் மிக்க பெருக்கத்தினூடே கொன்று விடுகின்றது.

புற்றுநோய் சிகிச்சைகளில் கேன்சர் கட்டிகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்படும் போது, இந்தக் கட்டி பரவுவது குறைக்கப்பட்டு, எளிதாக உடலை விட்டு நீக்கி விடலாம். ஆனால், பெரும்பாலும், இந்தச் செல்கள் மிகவும் தாமதமாகவே கண்டறியப் படுகின்றன. அதனால், கட்டிகள் பெரிதடைந்து நீக்கும்போது அதிகப்படியான வலி ஏற்படுகின்றது.

புற்றுநோய் நோயாளிகளின் வேதனையைக் குறைக்க வழி செய்யும் வகையில், ஒரு விஞ்ஞானிகள் குழு ஒரு புதிய யோசனையை “நேச்சர் ஜெனடிக்ஸ்” எனும் ஆய்விதழில் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வுமுடிவில் வெளியிட்டுள்ளனர்.
புற்றுநோய் கண்டறியவும் உடலில் எந்த இடத்தில் கட்டி வளர்ந்து வருகிறது என்பதைக் கண்டுபிடிக்கவும் ஒரு புதிய வடிவ இரத்தப் பரிசோதனையை உருவாக்கியுள்ளனர். குறிப்பாக, இந்த அறிவியல் முன்னேற்றம், புற்று நோயாளிகள், பயாப்சிஸ் (உடல் திசு) போன்ற வலிமிகுந்த அறுவை சிகிச்சைமுறையிலிருந்து விடுதலை பெற உதவும்.

இந்தப் புதிய “புற்றுநோய் இரத்தப் பரிசோதனை” புற்றுநோய் நோயாளியின் உடம்பில் உள்ள புற்றுநோய் கட்டிகளுடன் போட்டியிட்டு தோற்றுப்போய் மரணிக்கும் நல்ல மரபணுக்கள் தன் டிஎன்ஏ க்களை இரத்தத்தில் கலந்து வெளியேற்றும்
விஞ்ஞானிகள் இந்த டிஎன்ஏ பயனுள்ள திசுவை அடையாளம் காண மிகவும் பயனுள்ளதாய் இருக்கும் என நம்புகிறார்கள்.
அமெரிக்க கலிபோர்னியா-சான் டியாகோ பல்கலைக்கழகப் பேராசிரியரான குன் ஜாங், கட்டி இருப்பிடத்தை கண்டறிவது ஆரம்பநிலையில் ப்ற்ருநோயைக் கண்டறிவதற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்” எனக் கூறினார்.

புற்றுநோய் உயிரணு மற்றும் மற்ற நல்ல செல்களின் சிக்னல்களை ஒருங்கிணைப்பதன் மூலம், உடலில் கட்டி உள்ள இடம் மற்றும் அது வளரும் விகிதம் ஆகியவற்றை கண்டுபிடிக்க உதவும்.

இந்த ஆய்விற்காக, விஞ்ஞானிகள் 10 வெவ்வேறு இயல்பான இரத்த, குடல், கல்லீரல், நுரையீரல், பெருங்குடல், மூளை, சிறுநீரகம், கணையம், மண்ணீரல் மற்றும் வயிற்று திசுக்களின் CpG மெத்திலேஷன் வடிவங்கள் முழுமையான ஒரு தகவல்தொகுப்பை உருவாக்கி, புற்று நோயாளிகளின் புற்றுநோய் நோயாளிகளின் கட்டி மற்றும் இரத்த மாதிரிகள் சோதித்து ஆய்வு செய்யப்பட்டு கேன்சர் கட்டிகளின் தன்மை ஆய்வு செய்யப்பட்டது.