மும்பை:

நாட்டிலேயே முதன்முறையாக மும்பையில் ஏ.சி. மின்சார ரெயில் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரெயில்களை இயக்க கடந்த 2002ம் ஆண்டு திட்டமிடப்பட்டது.

முன்னதாக ரெயில் சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் வினோத் தாவ்டே கூறுகையில், ‘‘மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற பெரு நகரங்களில் ஏ.சி. மின்சார ரெயில் கட்டாயம் தேவை. இந்த நகரங்களில் வெப்பம் மற்றும் தூசிக்கிடையே அலுவலகம் செல்லும் மக்கள் போராடி வருகின்றனர். ஏ.சி. ரெயிலில் சவுகரியமாக பயணம் செய்ய முடியும்.

மெட்ரோ, ஏ.சி. ரெயில் சேவைகளால் மேலும் பலர் பொது போக்குவரத்து வசதியினை பயன்படுத்த முன்வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஏ.சி. மின்சார ரெயில் மூலம் சாலைகளில் செல்லும் கார்களின் எண்ணிக்கை குறைந்து போக்குவரத்து நெரிசல் குறையும்’’ என்றார்.