எடப்பாடி பதவியேற்க எதிர்ப்பு : உயர்நீதிமன்றத்தில் வழக்கு 

 

சென்னை:

இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு நடைபெறும் என்றநிலையில் எடப்பாடியின் பதவி ஏற்க எதிர்ப்புத்தெரிவித்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதை எதிர்த்து வழக்கறிஞர் ஜோதி என்பவர் சென்னை  ஹைகோர்ட்டில் இந்த பொதுநல வழக்கை தொடர்ந்துள்ளார். நீதிபதிகள் ரமேஷ் குலுவாடி, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய  பெஞ்ச் முன்னிலையில், பிற்பகல் 2.15 மணிக்கு வழக்கு விசாரணை என்று கூறப்பட்டது.

வழக்கறிஞர் ஜோதி என்பவர் ஜெயலலிதாவுக்கு நீண்ட காலம் தனிப்பட்ட வழக்கறிஞராக பணியாற்றி அனுபவம் கொண்டவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed