நாங்குனேரியில் ஒரு சமுகத்தினர் தேர்தல் புறக்கணிப்பு! வீடுகளில் கருப்புகொடி ஏற்றி எதிர்ப்பு

நாங்குனேரி:

நாங்குனேரி சட்டமன்ற தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அங்கு சில கிராமத்தை சேர்ந்த ஒரு சமூகத்தினர் தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி, தொகுதி மற்றும்  புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாங்குநேரியில் உள்ள 299 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  அங்கு அதிமுக சார்பில் நாராயண னும், காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும் போட்டியிடுகின்றனர்.

நாங்குநேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு வரும் அதிமுக வேட்பாளர் நாராயணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எந்த இடையூறும் இன்றி தேர்தல் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் வேளையில், நாங்குநேரி தொகுதியில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த குறிப்பிட சமூகத்தினர் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி இருப்பதுடன், தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளர், வாதிரியார், தேவேந்திர குலத்தான், குடும்பர், உள்ளிட்ட 7 பிரிவுகளை, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்குவதுடன் தேவேந்திர குல வேளாளர் என ஒரே சமூகமாக அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும் என்பது அவர்களது கோரி வருகின்றனர். இதை வலியுறுத்தி, பெருமாள் நகர், உன்னன்குளம், கள்ளத்தி, ஆயர் குலம் உள்பட பல ஊர்களைச் சேர்ந்த  ஊர்களைச் ந்த சமூகத்தினர் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

ஏற்கனவே புதிய தமிழகம் கட்சி சார்பில்,  7 பிரிவுகளை ஒன்றிணைத்து “தேவேந்திர குல வேளாளர்கள்” என்ற ஒற்றை பெயரின் கீழ் அரசாணை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இந்த கோரிக்கையை மாநில அரசு நிறைவேற்றாத நிலையில், அதற்கு எதிர்ப்பு   நாங்குநேரி தொகுதியின் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். வீடுகளிலும் தெருக்களிலும் கறுப்புக் கொடியேற்றி எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி