ர்சானா, ஒரிசா

ரிசாவில் அமித்ஷாவின் காரும், வேறு சில கார்களும் பயணம் செய்யும்போது ஒரு வாகனம் பசு ஒன்றின் மீது மோதி பசு படுகாயம் அடைந்தது.

பசுவின் பாதுகாவலர்கள் என்று தங்களை கூறிக் கொண்டு பசுவுக்காக கொலைகளையும் செய்யும் கட்சி பாஜக.  ஆனால் அந்த கட்சியின் மூத்த தலைவர் பயணம் செய்யும் போது உடன் வந்த வாகனத்தால் பசு ஒன்று மோதப்பட்டு படுகாயம் அடைந்துள்ளது.  இதை கண்டித்து பிஜு ஜனதா தள கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியுட்டுள்ளார்.    ”அமித்ஷாவுடன் வந்த வாகனம் பர்சானா அருகில் ஒரு பசுவின் மேல் மோதியது.  அதனால் பசு படுகாயம் அடைந்துள்ளது,  பசு புனிதமானது” என அந்த பதிவு கூறுகிறது.

காவல்துறை இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியின் விவரம்:

அமித்ஷாவும் அவர் ஆதரவாளர்களும் சில வாகனங்களில் சென்றுக் கொண்டிருந்தனர்.  அப்போது சாலையின் குறுக்கே திடிரென்று ஓடிய பசுவின் மேல் உடன் வந்த வாகனத்தில் ஒன்று மோதியது.  அதில் பசு காயமுற்றது.  வண்டியில் இருந்த வி ஐ பி என எழுதப்பட்ட போர்ட் உடைந்து விட்டது.  அமித்ஷாவும் உடன் வந்த பாஜக தலைவர்களும் வண்டியை நிறுத்தி, பசுவுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்து விட்டு பயணத்தை தொடர்ந்தனர்.   ஆட்சியாளர் ரஞ்சன்குமார் தாஸ் ஆணைப்படி, காயமடைந்த பசுவுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை செய்து குணமடந்து வருகிறது. என காவல்துறை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.