வெள்ளசேதமா? மேகதாது அணை விவகாரமா? பிரதமருடன் கர்நாடக முதல்வர் மற்றும் அதிகாரிகள் திடீர் ஆலோசனை

டில்லி:

ர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ள சேதம் காரணமாக பிரதமர் நரேந்திர மோடியுடன் கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி சந்திப்பு பேசினார். அதைத்தொடர்ந்து கர்நாடக குழுவினர் பிரதமருடன் ஆலோசனை நடத்தினர்.

அப்போது மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்க கோரியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடும் மழை காரணமாக கர்நாடகாவின் குடகு மாவட்டம் உள்பட சில மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. சேதமடைந்த பகுதிகளை சீர் செய்ய கர்நாடக அரசு மத்திய அரசிடம் நிதி உதவி கேட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து கர்நாடக வெள்ள சேதம் குறித்து ஆய்வு நடத்தி நிதி வழங்கப்படும் என மத்திய உள்துறை தெரிவித்து இருந்தது.

கர்நாடக முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இந்த நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி டில்லியில் நேரில் சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து முதல்வர் குமாரசாமியுடன்  கர்நாடக மாநில உயர்அதிகாரிகள் மற்றும் முன்னாள் பிரதமர் தேவ கவுடா ஆகியோர் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தினர்.

அப்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர்செய்ய நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், மேகதாது அணை விவகாரம் தொடர்பாகவே கர்நாடக முதல்வர் குமாரசாமி பிரதமர் மோடியை சந்தித்து பேசியதக தலைநகர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார்ட்டூன் கேலரி