கடலில் விழுந்த இந்தோனேசிய விமானத்தின் பைலட் இந்தியாவை சேர்ந்தவர்: மீட்பு பணிகள் தீவிரம்

ஜகர்தா: 

ந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த  ஜேடி-610 ரக லயன் ஏர் பயணிகள் விமானம் புறப்பட்டு 13 நிமிடத்தில் தகவல் துண்டிக்கப்பட்ட நிலையில், அது கடலில் விழுந்தது தெரிய வந்தது.  அதில் பயணம் செய்தவர்களின் நிலை என்ன ஆனது என கேள்விக்குறியான நிலையில், விபத்துக்குள்ளான அந்த  விமானத்தை இயக்கிய பைலட் இந்தியாவை சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் சுனேஜா என்பதும் தெரிய வந்துள்ளது.

விமானத்தை கண்டுபிடித்த மீட்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விமான பைலட் சுனேஜா (இந்தியாவை சேர்ந்தவர்)

விமான பைலட் சுனேஜா டில்லியில் உள்ள மயூர் விஹார் பகுதியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவர்  கடந்த 2011ம் ஆண்டு இந்தோனேசியாவின்  லயன் ஏர் நிறுவனத்தில் சேர்ந்து பைலட்டாக பணியாற்றி வருகிறார்.  இவர் இதற்கு முன்பாக போயிங் 737 விமானம் உள்பட பல விமானங்களை இயக்கி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அனுபவம் வாய்ந்த பைலட்டான சுனேஜா  இனிமையான நபர் என்றும் சக பைலட்கள் அவர் குறித்து பெருமிதமாக கூறி உள்ளனர்.

கடந்த 2005ம் ஆண்டு இந்தோனேசியாவில் உள்ள அஹலான் பப்ளிக் பள்ளியில் (Ahlcon Public School) படித்து வந்தார். 2009ம் ஆண்டில் தனது விமான பைலட் பயிற்சி பெற்ற  சுனேஜா 31 வயதில் தனது விமான பைலட் உரிமம் பெற்றார்.

இதற்கிடையில், செப்டம்பர் 2010 ல் எமிரேட்ஸ் பயிற்றுநராக 4 மாதங்கள்  பணிபுரிந்தார், பின்னர்  மார்ச் 2011 ல், ஜகார்தாவை அடிப்படையாகக் கொண்ட இந்தோனேசிய குறைந்த செலவிலான விமான லயன் ஏர் நிறுவனத்தில் சேர்ந்தார்.

சுனேஜாவின் பேஸ்புக் பக்கம் அவருக்கு மகிழ்ச்சியான குடும்பத்தை காட்டும். ஒரு அக்டோபர் 2016 படம் நான்கு கேப்டன்களால் அவரது கேப்டனின் தொப்பி மற்றும் ஈப்போலிட்டுகளைக் காட்டுகிறது. முதல் அதிகாரியிடமிருந்து ஒரு கேப்டனாக பட்டம் பெற்றபின், இதுவேயாகும்.

சுனேஜா குறித்து கூறிய மூத்த அதிகாரி ஒரவர், சுனேஜா தன்னிடம்  கடந்த ஜூலை மாதம் பேசியதாகவும், மீண்டும் டில்லிக்கு பணி மாற்றம் கிடைக்க முயற்சி செய்வதாகவும்  தெரிவித்து உள்ளார்.. அனைவரும் நலமுடம் இருக்க பிரார்த்தனை செய்து வருவதாகவும் கூறினார்.

சுனேஜா ஆகஸ்ட் 15, 2018 ல் லயன் ஏர் விமானத்தில் இணைந்தது, 800 மணி நேரம் பறந்து சென்று சாதனை படைத்துள்ளார்.

இந்த நிலையிலேயே அவர் இயக்கிய  விமானம் திடீரென விபத்துக்குள்ளாகி உள்ளது. விமானத்தில் பயணம் பயணிகள் மற்றும் பைலட் உள்பட பயணம் செய்த 189 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விபத்துக்குள்ளான விமானம்

டலுக்குள் விழுந்த விமானத்தை கண்டுபிடிக்கப்பட்டு நிலையில், அதை மீட்கும் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. அதை இயக்கிய பைவ்ய பைலட் சுனேஜா மற்றும்  அதில் பயணம் செய்த பயணிகள் 188 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை.

விபத்துக்குள்ளான பகுதியை சென்றடைந்த மீட்பு குழுவினர் சேதமடைந்த விமான பாகங்களை  மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர்.  மேலும் ஹெலிகாப்டர்  உள்பட மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்தோனேஷியாவில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள் ஜகார்த்தா கடல்பகுதியில் கண்டெடுப்பு