நடிகை காஜல் அகர்வாலை சந்திக்க ஆசைப்பட்டு ரூ.60லட்சம் பறிகொடுத்த பரிதாப இளைஞர்….!

சென்னை:

டிகை காஜலை சந்திக்க ஆசைப்பட்டு ரூ.60லட்சம் பறிகொடுத்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட் டுள்ளார் தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர். அவரிடம் ஆசை காட்டி பணத்தை பறித்த சினிமா தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகன், நடிகை காஜல்அகர்வால்மீது மோசம் கொண்டு, ரூ.60லட்சத்தை இழந்துள்ளார்.  அந்த வாலிபர் ஆபாச வளைதளத்தை மேய்ந்தபோது, அதில் ‘உங்களுக்கு பிடித்த நடிகையை நீங்கள் நேரில் சந்திக்கலாம்’ என  வெளியான விளம்பரத்தை நம்ப, காஜல் அகர்வால் மீது கொண்ட அதீத ஆசையால், தனது விபரங்களை பதிவு செய்துள்ளார்.

அதையடுத்து, உடனே ரூ.50 ஆயிரம் நுழைவுக்கட்டணம்  செலுத்த அறிவுறுத்திய இணையதளம், அவர் குறித்து நோட்டமிட்டு உள்ளது. இதில், அவர் பழுத்த வசதியான பார்ட்டி என தெரிய வந்ததால், அவரிடம் இருந்து  பணத்தை கறக்க திட்டமிட்ட பணம் கறந்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த அந்த நபர் தான் இனிமேல் பணம் தர முடியாது என்று கூற, அவரின் படத்துடன் வேறு பல இணையதள படங்களை இணைத்து, அதை உனது குடும்பத்தினருக்கு அனுப்பி  மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால், தனது கவுரவம் பாதிக்கப்படும் என நினைத்த அந்த இளைஞர் மூன்று  தவணைகளாக அவர்கள் கூறிய வங்கி எண்ணுக்கு ரூ.60 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார். அதன் பின்னரும் அவர்கள் பணம் கேட்டு மிரட்ட, விரக்தி அடைந்த அந்த வாலிபர் வீட்டை விட்டே வெளியேறி தலைமறைவானார்.

அவரை காணவில்லை என்று அவரது வீட்டார் கொடுத்த புகாரின்பேரில், இளைஞரை தேடிய காவல்துறையினர், கொல்கத்தாவில் அவரை கண்டுபிடித்தனர். அதையடுத்து நடைபெற்ற விசாரணையில், இந்த விவரம் வெளியானது. அவரை ஏமாற்றி பணம் பறித்து வந்த கும்பல் சென்னை அசோக் நகரில் இருந்து செயல்பட்டதும்,  சினிமா தயாரிப்பாளர் சரவணக்குமாருக்கு இதில் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சினிமா தயாரிப்பாளர் சரவணக்குமார் கைது செய்யப்ப்டட நிலையில், அவரிடம் இருந்து ரூ.9 லட்சம் மீட்கப்பட்டு உள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.