ரஜினிக்கு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் வித்தியாசமான வேண்டுகோள்

செல்லபாண்டி – ரஜினி

“மது குடிப்பவர் உடனடியாக விட முடியாது. படிப்படியா மதுப்பழக்கத்தை நிறுத்துங்கள் என்று தெரிவத்த நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவிக்கிறோம்” என்று தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவர் செல்லபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிஜிட்டல் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

“ சூப்பர்ஸ்டார்ரஜினிக்கு நன்றி!நன்றி!!

ரசிகர்கள்சந்திப்பு நிகழ்ச்சியில், “மதுகுடிப்பவர்கள் உடனே. நிறுத்தமுடியாது. படிப்படியாகதான் நிறுத்தமுடியும். குடிப்பவர்கள் எல்லோரும் யோகியோ சித்தரோ இல்லை. ஆகவே படிப்படியாககுறையுங்கள் என ரஜினிகாந்த் பேசியதை தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணன்வு சங்கம் மகிழ்வுடன் வரவேற்க்கிறது.

ரஜினிஅவர்களுக்குஅன்பானவேண்டுகோள்….

ஆரம்ப காலபடங்களில் புகைபிடிப்பது, மது குடிப்பது போன்ற காட்சிகளில் தாங்கள் நடித்துள்ளதால் ஒரு குடிமீட்புமையம் உங்கள் சொந்த செலவில் திறந்திட தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அன்புடன் வேண்டுகிறது” இவ்வாறு செல்லபாண்டியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

 

கார்ட்டூன் கேலரி