எஜமானரை காக்கும் முயற்சியில் அடித்துக் கொல்லப்பட்ட நாய்! 

சென்னை:

ளர்ப்பு நாய் ஒன்று அண்டை வீட்டுவாசி மற்றும் அவரது மகனை பார்த்து குரைத்ததால் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொல்லப்பட்டது.

சென்னை லாயிட்ஸ் ரோடு பகுதியில் கேமராவில் பதிவான இந்த கொடூர சம்பவத்தில் தன் எஜமானரை காப்பாற்ற குரைத்த நாயை மிக கொடூரமான முறையில் கிரிக்கெட் மட்டையால் இளைஞர் தாக்கியதில் அந்த நாய் பரிதாபமாக இறந்தது.

மணிகண்டன் இவரது அண்டைவீட்டில் வசிக்கும் ஆறுமுகம் ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட கைகலப்பில் மணிகண்டனுடைய நாயை ஆறுமுகம் கிரிக்கெட் மட்டையால் கொஞ்சமும் கருணையின்றி அடித்து கொன்றுள்ளார்.

நாயின் எஜமானருடன் ஏற்பட்ட பிரச்னையின் போது தன்னையும், தன்னுடைய மகனையும் பார்த்து அந்த நாய் குரைத்ததால் ஆறுமுகம் ஆத்திரமடைந்தார். வளர்ப்பு நாயான Dachshund (டேஷண்ட்) மணிகண்டனை தாக்குதலிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் மிக கொடூரமான முறையில் கொல்லப்பட்டது.

மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்பட்ட நாயின் உரிமையாளர் மணிகண்டன் காவல் நிலையத்தில் ஆறுமுகத்திற்கு எதிராக புகார் அளித்தும் போலீசார்  எவ்வித வழக்கும் பதிவு செய்ய மறுத்துவிட்டனர்.

You may have missed