கணவனின் கள்ளக்காதலை மனைவியிடம் போட்டுக்கொடுத்த கிளி

--

குவைத்: தனது எஜமானருக்கும் வீட்டு வேலைக்காரிக்கும் இருந்த கள்ளக்காதலை எஜமானியிடம் போட்டுக்கொடுத்து குடும்பத்தில் பூகம்பத்தை உண்டாக்கியிருக்கிறது ஒரு கிளி.

parrot

மனைவி இல்லாத நேரத்தில் கணவரும் வேலைக்காரியும் பேசிய காதல் பேச்சுக்களை கேட்ட அந்தக் கிளி அதை அப்படியே டேப் ரிக்கார்டர்போல ரெக்கார்ட் செய்து மனைவி முன்னால் பேசிக்காட்டியதும் அதிர்ச்சியடைந்த மனைவிக்கு அப்போதுதான் வீட்டில் தான் இல்லாதபோது நடக்கும் அசிங்கங்கள் தெரிய வந்திருக்கிறது. அதற்கு முன்னர் அவருக்கு தனது கணவர் மீது சின்ன சந்தேகம் கூட வந்ததில்லையாம்

இதைத் தொடர்ந்து தனது கணவர் தன்னை ஏமாற்றி விட்டதாக அப்பெண் போலீசில் பபுகார் அளித்திருக்கிறார். குவைத் நாட்டில் கள்ளக்காதல் என்பது சிறை தண்டனைக்குரிய குற்றம் ஆகும். ஆனாலும் ஒரு கிளியின் பேச்சை நம்பத்தகுந்த ஆதாராமாக கருதமுடியாது என்பதால் அந்த கணவன் தண்டிக்கப்பட வாய்ப்புகள் குறைவு என்று தெரிகிறது.