சர்கார் திரைப்படத்தின் எதிரொலி – அரசாங்கம் கட்டிக்கொடுத்த வீட்டை இடித்து தள்ளிய ரசிகர்!!

--

சர்கார் படத்தைப் பார்த்துவிட்டு, ரசிகர் ஒருவர் தமிழக அரசு இலவசமாக கட்டிக்கொடுத்த வீட்டை இடித்துத் தள்ளியுள்ளார். சர்கார் படத்தில் அரசின் இலவசப் பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த ரசிகர் இவ்வாறு செய்துள்ளார்.

sarkar

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘சர்கார்’. சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த நவம்பர் 6 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, இப்படத்தில் ஆளும் அதிமுக கட்சியின் இலவசத் திட்டங்களை விமர்சித்துள்ளதாகவும், ஜெயலலிதாவின் பெயரைப் பயன்படுத்தியதாகவும் அதிமுக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதன் பின்னர் ஆளும் கட்சியின் அழுத்தம் காரணமாக, சர்ச்சைக்குரிய காட்சிகளை படக்குழு நீக்கியது.

இதனிடையே விஜய் ரசிகர்கள், தமிழக அரசுக்கு எதிராக தங்கள் வீடுகளில் இருந்த லேப்டாப், மிக்சி. கிரைண்டர், பேன் உள்ளிட்ட இலவசப் பொருட்களை தூக்கி எறிந்தனர். இந்நிலையில், ரசிகர் ஒருவர், அரசாங்கம் கட்டிக்கொடுத்த இலவச வீட்டையை தரைமட்டம் ஆக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த நெட்டிசன்கள் ” ஒரு சினிமா மக்களிடம் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொண்டு சினிமா இயக்குனர்கள் இனியாவது திருந்துவார்களா? “ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.