ஆம்புலன்ஸ் தர மறுப்பு : இறந்த மகளின் உடலை 15 கி.மீ., தோளில் சுமந்து சென்ற தந்தை

ஒடிசா:

அரசு மருத்துவமனையில் உயிரிழந்த மகளை தந்தை ஒருவர் 15 கிலோ மீட்டர் தூரம் தூக்கி கொண்டே சென்ற கொடுமை ஒடிசா மாநிலத்தில் நடந்துள்ளது.

ஒடிசாவின் அன்குல் நகரை சேர்ந்த கதி திபார். இவரது 7 வயது மகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். பல்லஹராவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்தார்.

இதையடுத்து தனது மகளின் சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு தந்தை திபார் ஆம்புலன்ஸ் கேட்டுள்ளார். இதற்கு அந்த அரசு மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. இதனால் மகளின் சடலத்தை தோளில் சுமந்து கொண்டு 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தனது வீட்டிற்கு மனைவியுடன் திபார் சென்றார்.