மதுரையில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் சேதம்

மதுரை:

துரை அருகே  பழைய பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது.

மதுரை அருகே உள்ளது வண்டியூர். இந்த பகுதியில் உள்ள பிரபலமான நாச்சியார் திருமணம் மண்டபத்தின் பின்புறத்தில், தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் செயல்பட்டு வருகிறது.

இந்த குடோனில் இருந்து இன்று அதிகாலை குபுகுபுவென புகை வெளியானது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக் தகவல் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து 3 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீய்ச்சியடித்து, தீயை கட்டுப்படுத்த முயன்றனர். தீ பிளாஸ்டிக்கில் பரவி கரும்புகையுடன் குபுகுபுவென எரிந்ததால், தீயை எளிதாக கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து பல மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்ட முயற்சி காரணமாக தீ கட்டுப்டுத்தப்பட்டது.

இந்த விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமானதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.