Random image

ஆந்திராவின் பிரபல திரையரங்கில் பயங்கர தீ விபத்து: பல கோடி ரூபாய் சேதம்

விசாகப்பட்டினம்,    

ந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சினிமா தியேட்டர் ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கருகி சேதமடைந்தன. இதன் காரணமாக பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள  கஜூவாகா பகுதியில் ஸ்ரீ கன்யா சினிமா ஹால் என்ற தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டரில்  இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தியேட்டரின் தரைத்தளத்தில் பற்றிய தீ, மளமளவெனப் பரவி கூரை வரை பற்றி எரிந்தது. இதனால் கூரையில் இருந்து பல அடி உயரம் நெருப்பு பிளம்பாக காட்சியளித்தது.

தீ விபத்து குறித்து தியேட்டர் காவலாளி  உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரித்தார். அதைத்தொடர்ந்து 5 வாகனங்களில் வந்த  தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த பயங்கர தீ விபத்தில் தியேட்டரின் உள்பகுதி முற்றிலும் எரிந்து நாசமனது. இந்த தீ விபத்து காரணமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், திரைச்சீலை மற்றும் கருவிகள் சேதமடைந்தது.

தீ விபத்து ஏற்பட்டபோது, ஒருசில ஊழியர்கள் மட்டுமே தியேட்டர் வளாகத்தில் இருந்ததாகவும், அவர்கள் உடனடியாக வெளியேறி விட்டதாவும் கூறப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.