Random image

ஒரு ரசிகையாக குரோஷியாவின் வெற்றியை கொண்டாடிய முதல் பெண் ”ஜனாதிபதி”

உலக கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதி சுற்றில் குரோஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வெற்றிக்கொண்டது. குரோஷியாவை சேர்ந்த அனைவரும் இந்த வெற்றியை கொண்டாடிய வேலையில் அந்நாட்டின் ஜனாதிபதி மைதானத்திற்கு வந்து தன் பாணியில் குரோஷியாவின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தார்.

Croatia

குரோஷியாவின் முதல் பெண் ஜனாதிபதியான கொலிண்டா கிராபர்-கிதரோவிக் உலக கோப்பை கால்பந்து போட்டியின் மிகப்பெரிய ரசிகையாக உள்ளார். குரோஷியா அணி எதிர்கொள்ளும் ஒவ்வொரு போட்டியிலும் கொலிண்டா மைதானத்தில் நிச்சயம் ஆஜர் ஆவார். உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானத்திற்கு சென்றாலே நாம் அவரை எளிமையாக பார்க்க முடியும்.

கடந்த புதன்கிழமை நடந்த அரையிறுதி போட்டியில் குரோஷியா அணி மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. நினைத்து பார்க்கமுடியாத தருணத்தில் நூலிழையில் குரோஷியா, இங்கிலாந்தை வெற்றிக்கொண்டது. உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக நான்கு மில்லியன் மக்களை மட்டுமே கொண்ட சிறிய நாடான குரோஷியா இறுதி சுற்றுக்கு முன்னேறியது இதுவே முதல் தடவை.

இந்த வெற்றியை கொண்டாடிய கொலிண்டா கிராபர் தனது பேஸ்புக் பதிவில் “ நண்பர்களே இது சாத்தியமானது தான். அனைவருக்கும் வாழ்த்துக்கள்… !, அனைத்து ரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள். தற்போது குரோஷியா பைனலில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்!!!!!!!!!!!)” என்று குறிப்பிட்டுள்ளார்.

காலிறுதி சுற்றில் ரஷ்யாவை எதிர்கொண்ட குரோஷியா 4-3 என்ற கோல்கள் கணக்கில் பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில் வெற்றிப்பெற்றது. இந்த வெற்றியை ரஷ்யாவின் பிரதமர் கண் முன்னே கொண்டாடிய கொலிண்டா, சிறு நடனமும் ஆடினார். இது சமூக வளைதளங்கள் அதிகளவில் கால்பந்து ரசிகர்களால் பகிரப்பட்டது.

kolinda

ஒவ்வொரு முறையும் தனது நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் ஆதரவு அளிக்கும் வகையில் கொலிண்டா உலக கோப்பை கால்பந்து போட்டியை மைதானத்திற்கு வந்து பார்த்து மகிழ்வார்.

கொலிண்டா கிராபர் 2015ம் ஆண்டு நான்காவது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமைக்கு கொலிண்டா சொந்தக்காரர். அவரது பேஸ்புக் பக்கத்தில் குரோஷியா நாட்டின் ஜெர்சியை அணிந்துக்கொண்டு வெற்றியை கொண்டாடிய புகைப்படங்களும், வீடியோக்களும் இடம்பெற்றுள்ளன.

”நம்பமுடியாத ஒன்றாக கூட இது இருக்கலாம். பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் தொடர்பாக ரஷ்யா சென்ற கொலிண்டா கால்பந்து போட்டியை பார்க்க மைதானத்திற்கு வந்தார். மைதானத்தில் விஐபி இருக்கையில் அவர் அமைந்திருந்ததால் குரோஷியாவின் டி-ஷர்ட்டை போட அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர் கவலையுடன் போட்டியை பார்த்தார். ஆனால் குரோஷியாவின் ஜனாதிபதி என்ற அடையாளத்தை அவர் சிறிதும் நினைத்து பார்க்கவில்லை. ஒரு ரசிகையாகவே மைதானத்தில் அமர்ந்திருந்தார்” என்று ஆனந்த் மஹிந்த்ரா என்பவர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.