பொருளாதாரத்தில் பின்தங்கிய சிவகாசி அரசு பள்ளி மாணவ – மாணவிகள், முதல்முறையாக விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய சிவகாசி அரசு பள்ளி மாணவ – மாணவிகள், முதல்முறையாக விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டனர்.  விமானத்தில் பறக்க வேண்டும் என்ற  அவர்களது ஆசையை தன்னார்வ தொண்டு நிறுவனங்களான ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்கில் இந்தியா ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து நிறைவேற்றியுள்ளனர்.

புதன்கிழமை சிவகாசியில் உள்ள தங்களது பள்ளியில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்ட இம்மாணவர்கள், காலை 6.30 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். அதன் பின்னர் விமான நிலையத்தை சுற்றிப்பார்த்த மாணவர்கள், அங்கு புகைப்படம் எடுக்கவும் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் விமானம் ஏறிய மாணவர்கள், சுமார் 1.15 மணி நேர பயணத்திற்கு பின் சென்னை வந்தடைந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் ரவுண்ட் டேபில் மற்றும் லேடீஸ் சர்கில் குழுவினரால் வரவேற்கப்பட்ட மாணவர்கள், அங்கிருந்து பேருந்து மூலம் ஈ.சி.ஆர் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் மீதம் உள்ள நேரத்தை விஜிபி யுனிவர்சல் கிங்டம் பகுதியில் அம்மாணவர்கள் செலவழித்தனர்.