ஈஸ்டருக்காக கொரோனா வடிவத்தில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் வகைகள்: பிரான்சின் பிரபல சமையல்கலை வல்லுநர் அசத்தல்

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சாக்லேட் தயாரிப்பாளர் ஒருவர் கொரோனா வைரஸ் வடிவம் போன்று ஈஸ்டர் சாக்லேட்டுகளை தயாரித்துள்ளார்.

உலகளவில் தொற்று நோயான கொரோனா பற்றிய வேதனைகள் அதிகம் இருக்கும் நேரத்தில் அதை பற்றி நகைச்சுவையாக சில விஷயங்கள் செய்வது முற்றிலும் மாறுபட்ட ஒன்று.

அப்படிப்பட்ட ஒரு நகைச்சுவையான விஷயத்தை செய்திருக்கிறார் பிரான்ஸ் நாட்டின் பிரபல சாக்லேட் தயாரிப்பாளரான ஜீன் பிரான்சுவா ப்ரே. அவர், கொரோனா வைரஸ் வடிவம் போன்று ஈஸ்டர் பண்டிகைக்கான சாக்லேட்டுகளை வடிவமைத்துள்ளார்.

அதற்காக அவர் கொரோனா வைரசின் முப்பரிமாண  படத்தை பயன்டுத்தி இருக்கிறார். கொரோனா வைரசின் படத்தில் இருக்கு சிறு முட்கள் போன்ற வடிவத்துக்கு அவர் பாதாம் துண்டுகளை பயன்படுத்தி இருக்கிறார்.

அவரின் இந்த வித்தியாசமான சாக்லேட் வகைகள், அதிகளவு விற்பனையாகி இருக்கின்றன. இதுபற்றி வாடிக்கையாளர்கள் கூறி இருப்பதாவது: இந்த கவலை காலங்களில் மனச்சோர்வு அல்லது மனநோய் ஏற்படும்.

அத்தகைய விஷயங்களை அமைதிப்படுத்தி வழிநடத்துவது முக்கியம். நம்மிடையே இருக்கும் அச்சங்களை வெல்ல இது ஒரு வழி, பயத்துற்கு சிறந்த மருந்தாகும் என்றனர்.