காஷ்மீர்:
பாகிஸ்தான் பிரிவினை வாத தலைவர் கிலானி நேற்று வெளியிட்ட அறிக்கையில் பாகிஸ்தான் நமது நண்பன் என்றும், இந்தியா நமது எதிரி, ஆக்கிரமிப்பு சக்தி என்றும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகீதி பயங்கரவாதி பர்ஹான் வானி பாதுகாப்புபடையினரால் சுட்டுக்கொல்லப் பட்டதை தொடர்ந்து  வன்முறை போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இரண்டு மாதமாக நடைபெற்று வரும் இந்த வன்முறையில் இதுவரை 70க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.  ஆயிரகணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
kasmir
இதையடுத்து  உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் அனைத்துக்கட்சி குழு கடந்த 4,5 ஆகிய தேதிகளில் பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அவர்களுடைய கருத்துகளை கேட்டறிந்தனர்.  ஆனால்,  அனைத்துக்கட்சி குழுவினரை சந்திக்க பிரிவினைவாதிகள் மறுப்பு தெரிவத்துவிட்டனர்.
இதையடுத்து அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு சலுகைகளை பறிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
நேறு காலை பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு பிரிவினைவாத தலைவர் கிலானி அழைப்பு விடுத்தார் ஆனால், பாதுகாப்பு கருதி போலீசார்  அனுமதி மறுத்துவிட்டனர்.  இதையடுத்து கிலானி  அறிக்கை  வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
1kilani
நமது சுதந்திர போராட்டத்தின் தற்போதைய நிலை நமது இலக்கான சுதந்திரத்துக்கான பாதையின் புதிய சக்தியை வழங்கியுள்ளது.
“பாகிஸ்தான் நமது நண்பன், நமது நலம் விரும்பி என்பதை காஷ்மீர் அமைதியின்மையின் போது மீண்டும் அந்நாடு நிருபீத்துள்ளது.  பாகிஸ்தானும் அந்நாட்டு மக்களும் நமக்காக வலியையும் குரலையும் எழுப்பினார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகங்கள் மீதும் குற்றம் சாட்டியுள்ள கிலானி, இந்தியா  நமக்கு எதிரி என்றும்,  ஆக்கிரமிப்பு சக்தி எனவும் தெரிவித்துள்ளார்.