குமரி: பாலியல் பலாத்காரம்: இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

ன்னியாகுமரியில் பாலியல் தொல்லை காரணமாக இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் வாழபழஞ்சி பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் ஒருவர் கடந்த 11ஆம் தேதி அன்று திடீரென தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பலத்த தீக்காயத்துடன் சிகிச்சை பெற்றுவந்த அந்த பெண்ணிடம் வரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

ராஜேஷ்

அவர்,  “எனது வீட்டில் டிவி பழுது பார்க்க உறவினர் ராஜேஷ் வந்தார். வீட்டில் வேறு யாரும் இல்லாத நிலையில் என்னை பலாத்காரப்படுத்த முயன்றார். நான் சத்தம்போட்டதால் வெளியேறிவிட்டார். இது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. மேலும், இந்த விசயத்தை வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவேன் என்றும் ராஜேஷ் தொடர்ந்து மிரட்டினார். இதனால் விரக்தி அடைந்து தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்தேன்” என்று அந்த இளம் பெண் தெரிவித்தார்.

இதையடுத்து காவல்துறையினர் மாஜிஸ்திரேட்டுக்கு தகவல்கொடுக்க, அவர் மருத்துவமனைக்கு வந்து அந்த இளம் பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றார்.

இந்த நிலையில் ராஜேஷ் தலைமறைவாகிவிட்டார். அவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே சிகிச்சை பலனின்றி அந்த இளம் பெண் உயிரிழந்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம் பெண்ணின் உறவினர்கள் ராஜேஷை கைது செய்ய வேண்டும் என காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் காவல்துறையினரின் வாகனத்தையும் முற்றுகையிட்டனர். இதையடுத்து கராஜேஷ் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்தனர்.