தேனி:

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தேனி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரான  தனது மகன் ரவீந்திரநாத்துக்கு ஆதரவு கோரி துணைமுதல்வர் ஓபிஎஸ் நேற்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

காலையில் அலங்காநல்லூரில் இருந்த தனது பிரசாரத்தை தொடங்கியவர் அருகிலுள்ள பல்வேறு ஊர்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார்.  மக்களிடம் நடந்து சென்று ஓட்டுகேட்ட ஓபிஎஸ், பஸ் நிறுத்தத்தில், பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மற்றும் மாணவ மாணவிகளிடமும் வாக்கு சேகரித்தார்.

ஓபிஎஸ்-சை கேள்விக்கணைகளால் துளைத்த மாணவி

அப்போது  இரு மாணவிகள் ஓபிஎஸ்-ஐ மறித்து சார் கொஞ்சம் நில்லுங்கள் என்றனர்…ஓபிஎஸ்சும் ஆவலோடு சிரித்துக்கொண்டே,,, பரிச்சைக்கு போரிங்களா,  நல்லா படிங்க  என்று கூறிவிட்டு, என்னம்மா என்று  அவர்களின் கேள்விகளை எதிர்நோக்கினார். அப்போது ஒரு மாணவி,  சார் உங்களுக்கு என்னை போன்ற மகள் இல்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஓபிஎஸ் ஏம்மா…. என்று  மாணவியின் முகத்தை நோக்க….பொள்ளாச்சியில் என்னை போன்ற எராளமான  மாணவிகளை சீரழிச்சிருக்கிறாங்க… இந்த கொடுமை  கடந்த 7வருசமா நடந்ததாக சொல்கிறார்கள்… ஏற்கனவே கடந்த வருடம் புகார் கொடுத்தும் அதை நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்… உங்க  கட்சிகாரர்களே  இதில் சம்பந்தப்பட்டு இருப்பதால் நடவடிக்கை எடுக்க மறுக்கிறீர்களா….?  கட்சிதான் உங்களுக்கு முக்கியமா? மக்கள் இல்லையா? என்று சரமாரியாக கேள்விக்கணைகளை வீசினார்.

இதற்கு பதில் அளிக்க முடியாமல் ஓபிஎஸ் சிரித்துக்கொண்டே நிற்க… மாணவி தொடர்ந்து, நாங்கள் ஓட்டுப்போட்டு நாட்டை ….  உங்களிடம் தானே நாட்டை ஒப்படைத்திருக்கிறோம். என்றவர். பதில் சொல்லுங்க சார்  என்றவர், எங்க  வீட்டில் கூட அம்மா படம்தான் இருக்கு… என்றார்.

இதனால் வெலவலத்துபோன ஓபிஎஸ் பதில் சொல்ல முடியாமல் தவித்த நிலையில், அருகில் இருந்தவர்கள் அந்த மாணவியை மிரட்டும் தொனியில் நீ யாரு, உங்க அப்பா யாரு என்று கேட்க, அப்போது பொதுமக்களும் ஏராளமானோர் சூழ்ந்ததால் ஓபிஎஸ் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து, ஓபிஎஸ்  அந்த மாணவியிடம் …. நீ சொல்றது சரிதானம்மா…  அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்று கூறியவர்… . தைரியமாக வந்து கேள்வி கேட்கிற பாரு இதுதான் ஜனநாயகம்…  உன் தைரியத்தை பாராட்டுகிறேன்… என்று சிரித்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்துவிட்டார்….

இதன் காரணமாக, ஓபிஎஸ் நடைபயணத்தை விட்டு, ஜீப் மூலம் தனது பிரசாரத்தை தொடர்ந்தார். ர்.

மாணவி ஒருவர் ஓபிஎஸ்-ஐ வழிமறித்து துணிச்சலாக கேள்வி எழுப்பியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள் அந்த மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், அதிமுகவினரோ கலக்கம் அடைந்து உள்ளனர். தேனியில் வெற்றி பெறுவோமோ என்று கலையில் சூழ்ந்துள்ளனர்.

பொள்ளாச்சி விவகாரம் தமிழக இளைய சமுதாயத்தினரிடையே  எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதை கண்டு தமிழகம் முழுவதும்  அதிமுகவினர் ஆடிப்போய் உள்ளனர்