தமிழகத்தில் ஒரு நாள் முதல்வர் கேள்விபட்டிருக்கோம். ஆனால் அயர்லாந்தில் ஒரு ஆடு 2 நாள் ராஜாவாக இருந்துள்ளது. அது பற்றிய விபரம்:

அயர்லாந்தின் தென் மேற்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றின் ராஜாவாக காட்டு மலை ஆட்டிற்கு முடிசூட்டப்பட் வினோதத்தை ஏற்படுத்தியுள்ளது. கில்ர்கின் நகர மக்களே இவ்வாறு ஆட்டை ராஜாவாக முடிசூட்டியுள்ளனர்.

அயர்லாந்தின் பழமையான திருவிழாக்களில் ஒன்றான பக் பேர் பண்டிகைக்காக, கில்ர்கின் நகரத்தில் உள்ள மக்கள், காட்டு மலை ஆட்டை அழைத்து வந்து முடிசூட்டினர்.

இதற்கு முன்பாக ஆட்டை நகரம் முழுவதும் ஊர்வலமாக கொண்டு சென்ற மக்கள் பக் திருவிழாவின் ராணியான உள்ளூர் பள்ளி சிறுமி கையால் ஆட்டிற்கு ராஜாவாக முடிசூட்டினர்.

‘‘திருவிழா முடியும் வரை ராஜாவாக முடிசூட்டப்பட்டுள்ள ஆட்டிற்கு அரச மரியாதை வழங்கப்படும், ஆட்டிற்கு சாம்பல் மர கிளைகள், நீர் மற்றும் முட்டைக்கோசு ஆகியவை உணவாக வழங்கப்பட்டுள்ளது. திருவிழா முடிந்த பின்னர் ஆடு அதன் மலை வீட்டிற்குத் திரும்பி அனுப்பப்படும்’’ என கில்ர்கின் நகர மக்கள் தெரிவித்துள்ளனர்.