ஊட்டி அருகே 500அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி

ஊட்டி:

தகை அருகே 500 அடி பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 7 பேர் பலியானதாகவும், 30க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

உதகை – குன்னூர் இடையே மந்தாடா என்னும் இடத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்தனர்.

இந்த கோர விபத்தில் 7 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

விபத்துக்குள்ளான  பேருந்தில்,  35க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.