6.4 கோடிக்கு 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள்! தெலுங்கானாவை அதிர வைத்த மோசடி கும்பல் கைது

கம்மம்: தெலுங்கானாவில் ரூ.6.4 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கம்மம் மாவட்டத்தில் வெம்சூர் மண்டல் பகுதியை ஒரு குழுவினர், ரூ.80 லட்சம் கொடுத்தால் 1 கோடி ரூபாய்க்கு கள்ள நோட்டுக்கள் கொடுக்கப்படும் என்று கூறி பொதுமக்களை ஏமாற்றி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

மேலும் அதற்காக 20 சதவீதம் கமிஷன் வழங்கப்படும் என்று கள்ள ரூபாய் நோட்டு கும்பல் கூறியதாகவும் தெரிகிறது. ரகசிய தகவல் கிடைத்த போலீசார், கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 5 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.6.4 கோடிக்கு கள்ள ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர். இதில் இன்னும் யார், யாருக்கு எல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறி இருக்கின்றனர்.