72 மணி நேரம் இதயம் துடிப்பு நிறுத்தப்பட்ட பெண்!

சீனாவை சேர்ந்த இளம்பெண்ணின் இதய துடிப்பை 3 நாட்களுக்கு நிறுத்தி வைத்து அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

doctors

சீனாவின் பியூஜியன் மாகாணத்தில் உள்ள சியாமென் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவிக்கு(வயது 26) திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மாரடைப்பால் மயங்கி விழுந்த அந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செய்யல்லப்பட்டார். மருத்துவமனையில் முதற்கட்டமாக அந்த பெண்ணிற்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், அவரின் உடலில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததை தொடர்ந்து இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவெடுத்தனர். அதன்படி அந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சைக்கான அனைதுட்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டன. அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது அந்த பெண்ணின் இதயம் துடிக்காமல் இருக்க வேண்டும். அதற்காக கிட்டத்தட்ட மூன்று நாட்கள் 72 மணி நேரம் அந்த பெண்ணினி இதய துடிப்பு நிறுத்தப்பட்டது.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் அந்த பெண்ணிற்கு இதய துடிப்பை சரிசெய்த மருத்துவர்கள் மீண்டும் அதனை துடிக்க செய்தனர். தற்போது அந்த பெண் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சைக்காக ஒரு பெண்ணின் இதயதுடிப்பை 72 மணிநேரம் நிறுத்திவைத்து மீண்டும் இயங்க செய்தது மருத்துவ உலகில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.