Random image

” தேங்காய் எண்ணெய் சுத்தமான விஷம் ” – ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் சர்ச்சை கருத்து

தேங்காய் எண்ணெய்யை சுத்தமான விஷம் என்று ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பேராசியரின் இந்த கருத்திற்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டுமென கேரள விவசாயத்துறை அமைச்சர் சுனில் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

coconut_oil

உலகின் உள்ள பல்வேறு பகுதிகளில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை குறிப்பிட்டு சொல்லப்போனால் கேராளா மாநிலம் முழுவதும் சமையலுக்கு தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமையலுக்கு பயன்படுதப்படும் தேங்காய் எண்ணெய் சுத்தமான விஷம் என்று ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் பேராசிரியர் கரின் மிஷெல்ஸ் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நடந்த கருத்தரங்கில் மிஷெல்ஸ் பேசும்போது, “ தேங்காய் எண்ணெய் சுத்தமான விஷமாகும். நான் தேங்காய் எண்ணையை அழகு சார்ந்த பொருட்களில் உபயோகிப்பது குறித்து பேசவில்லை. அதை உணவில் சேர்த்து கொள்வது குறித்து பேசுகிறேன். தேங்காய் எண்ணெய் மூலம் உடலுக்கு நன்மை ஏற்படும் சதவீதம் மிகக் குறைவு. நீங்கள் சாப்பிடும் உணவு பொருட்களில் மிகவும் மோசமானது தேங்காய் எண்ணெய்” என்று எச்சரித்துள்ளார். அவரின் இந்த பேச்சு பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

தேங்காய் எண்ணெய் உடலுக்கு தீங்கானது என்று கூறுவது இது முதல்முறை அல்ல, கடந்த வருடம் அமெரிக்கவில் இயங்கும் இருதய நலன் சார்ந்து இயங்கும் தன்னார்வ அமைப்பு தேங்காய் எண்ணெய்யில் கொழுப்பு அதிகம் இருப்பதால் மக்கள் அதனை உணவில் சேர்த்து கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள மருத்துவர் ராஜேஷ் முரளிதரன், “பொதுவாக அனைத்து விதமான எண்ணெய்களிலும் கொழுப்புகள் உள்ளன. எனவே, அளவு அதிகமாக பயன்படுத்துவதை தவிர்த்து தேவையான அளவு பயன்படுத்த வேண்டும். இதில், தேங்காய் எண்ணெய்யில் மட்டும் கொழுப்புகள் அதிகம் இருக்கிறது என கூற முடியாது” என்றார். தேங்காய் எண்ணெய் குறித்து பேராசிரியர் மிஷெல்ஸ் கூறிய கருத்துக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேரள விவசாயத் துறை அமைச்சர் சுனில் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.