நெல்லையில் ஒரு ஆணவக்கொலை?!

நெல்லை மாவட்டத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துதள்ளது.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ளது வெள்ளாங்குளி. இங்குள்ள தாமிரபரணி ஆற்றுக்கரையில்  ஒரு வாலிபர் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன.

இதுகுறித்து வீரவநல்லூர்  காவல் நிலையத்துக்கு  தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் அதே பகுதியை சேர்ந்த இசக்கிசங்கர்(வயது 33) என்பது தெரியவந்தது.

இசக்கி சங்கர் களக்காட்டில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில்   பணியாற்றி வந்தார். இவர்   அதிகாலையில் அப்பகுதியில் உள்ள ஆற்றில் குளிப்பார். சம்பவத்தன்றும் அதே போல சென்றபோது, மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக்கொன்றதாக தெரிகிறது.

இந்த நிலையில், அவர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஒரு யூகத்தகவல் வெளியாகி இருக்கிறது. இன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை இசக்கி சங்கர் காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணின் உறவினர்கள் இசக்கி சங்கரை கொன்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இசக்கி சங்கரின் மரணத்தை கேள்விப்பட்ட அந்த பெண், விசம் குடித்து தற்கொலைக்கு முயன்றாதாகவும் கூறப்படுகிறது.

 

#honourkilling #nellai #isakishankar