ஒரு வீடு; ஒரு ஆண்; 24 அழகிகள்: அமெரிக்காவை கலக்கிய பிக்பாஸ்!

நெட்டிசன்:

கிருஷ்ணா அறந்தாங்கி முகநுல் பதிவு

இங்கு கலக்கும் Big boss போல அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிக் கொண்டிருருந்த  Reality showன் பெயர்  “The bachelor “.

ரொம்ப அழகான கட்டுமஸ்தான ஒரு பணக்கார ஆண்..  24 அழகான இளம்பெண்கள்..  இவர்களை சுற்றியே அந்த ஷோ நகர்கிறது. எத்தனை நாள்கள் என தெரியவில்லை..

அவன் மனதை எந்த அழகி வசீகரிக்கிறாளோ அவளையே அந்த அழகன்  திருமணம் செய்து கொள்வான் உண்மையாகவே..

கடற்கரையை ஒட்டி ஒரு ஏக்கரில் ஒரு அரண்மனை போன்ற பங்களா, நீச்சல் குள வசதிகளுடன்  இதற்காக  ஒதுக்கப்படுகிறது.. அங்கு  அந்த  ஆணழகனும் 24 அழகிகளும் இருப்பார்கள்.

அவனை மயக்க அந்த அழகிகள் என்ன முயற்சி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அவனும் மனதுக்கு பிடித்த ஒருத்திக்கு ஒருநாள் டேட்டிங் ஒதுக்குவான்.

அன்று மற்ற பெண்கள் அவனை தொந்தரவு செய்ய கூடாது.. தினமும் ஒரு பெண்ணுக்கு  டேட்டிங் ஒதுக்கி “நல்லா பழகுவான்!”… இதற்கிடையில் அவனை  வசீகரிக்க அவர்கள் முயல்கையில் அவர்களுக்குள் வாய்ச்சண்டை கடுமையாக  நடக்குமாம். முடிந்த  அளவு கவர்ச்சியாக  உடை அணிந்திருப்பார்களாம்.

கடைசியில் அந்த ஆணின் மனதை முழுதாக கவர்ந்தவள் யார்  என கடைசி நாளில் அறிவிப்பான்..

இந்த கடைசி நாள் வரை இந்த 24 பெண்களும் அடிக்கும் லூட்டி மிக பிரபலமாம்.

காதல், சோகம், அழுகை, செக்ஸ் எல்லாமே கலந்திருக்குமாம் இந்த “தி பேச்சிலர்” நிகழ்ச்சியில்.. “”இந்த மாதிரி ஒரு ரியாலிட்டி ஷோ நம்மூரு டிவியில வராதா……