மிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ள நிலையில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர்களுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

பல இடங்களில் அதிமுக அமைச்சர்களை பொதுமக்கள் ஊருக்குள் வர விடாமல் தடுத்து வரு கின்றனர்.  பல இடங்களில் முதல்வர் பழனிச்சாமி உள்பட அமைச்சர்களின் தேர்தல் பிரசாரங்களுக்கு பொதுமக்கள் வருவது இல்லை.

இந்த நிலையில், முதல்வரின் தேர்தல் பிரசாரத்தின்போது மக்கள் கூட்டத்தை காண்பிக்க அதிமுக நிர்வாகிகள் பணத்துக்கு ஆட்களை அழைத்து வந்து மாஸ் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக பல இடங்களில் பிரச்சினைகளும் ஏற்பட்டு வருகிறத.

இந்த நிலையில் சமீபத்தில்  எடப்பாடியின்  தேர்தல் பிரசாரத்திற்காக அதிமுகவினர் ஆட்கள் கூட்டி வந்தனர். ஆனால், எடப்பாடி வர நேரமானால், பொதுமக்கள் கூட்டத்தை விட்டு வெளியேறத் தொடங்கினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுகவினர், வெளியேறும் மக்களை தடுக்கும் வகையில், மனித சங்கிலி அமைத்து, அவர்கள் கூட்டத்தை விட்டு வெளியேறாதவாறு தடுத்தனர். சிலர், அவர்களை யும் மீறி சென்றனர். ஒருசிலர் முனுமுனுத்துக்கொண்டே கூட்டத்திற்கு வந்தனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மனிதசங்கிலி அமைப்பது என்பது, முக்கியமான ஒரு கோரிக்கையை வலியுறுத்தி மக்களின் உணர்ச்சிகளை அரசுக்கு தெரியப்படுத்தும் நடைபெறும் ஒரு போராட்டம்.

ஆனால், அரசியல் கூட்டத்தில் இருந்து மக்களை வெளியேறுவதை தடுக்க அதிமுகவினர் மனிதசங்கிலி நடத்தி அவர்களை வெளியேறா விடாமல் தடுத்த நிகழ்வு  நகைப்பையும், வியப்பையும் ஏற்படுத்தியது.