டோக்யோ

ப்பானை சேர்ந்த ஒரு இளைஞர் தான் கொன்ற கொசுவின் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதை தொடர்ந்து அவர் டிவிட்டரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஜப்பானை சேர்ந்த ஒரு இளைஞர் @nemuismywife என்னும் பெயரில் டிவிட்டரில் கணக்கு வைத்திருந்தார்.  ஒரு நாள் அவர் ஆர்வமாக டி வி பார்த்துக் கொண்டிருந்த போது அவரை ஒரு கொசு கடித்துள்ளது.  அதை ஒரே அடியில் கொன்று விட்டு, இறந்த கொசுவை புகைப்படம் எடுத்து டிவிட்டரில் பதிந்துள்ளார்.  ”அலுத்து சலித்து நான் ரிலாக்ஸ்டாக டிவி பார்க்கும் போது கடிக்கிறாயா? சாவு (ஆனால் நீ ஏற்கனவே செத்துட்டே)” என ஒரு கேப்ஷனுடன் பதிந்துள்ளார்.

சில தினங்களில் அவருக்கு டிவிட்டரில் இருந்து அவர் டிவிட்டர் விதிகளை மீறியதற்காக அவரது டிவிட்டர் கணக்கு நீக்கப்பட்டதாகவும், இனி அவரால் அந்த கணக்கை உபயோகப் படுத்த முடியாது எனவும் தகவல் வந்தது.   இதனால் எரிச்சல் அடைந்த அவர் புதியதாக @DaydreamMatcha என்னும் பெயரில் ஒரு கணக்கை துவங்கி ”எனது பழைய கணக்கு நான் கொசுவைக் கொன்றேன் என்பதால் நீக்கப்பட்டுள்ளது.  நான் தெரிவித்ததில் என்ன விதி மீறல் உள்ளது?” என கேட்டுள்ளார்.

இந்த டிவீட் 31000 பேரால் பகிரப்பட்டுள்ளது.  இதற்கு இதுவரை 27000 பேர் லைக் அளித்துள்ளனர்.  இந்த தடை குறித்து விசாரித்த போது டிவிட்டர் ஒரு புரோக்ராமை நிறுவியுள்ளதாகவும்,  அந்த புரோக்ராம், டிவீட்டுகளில் ஒரு சில வார்த்தைகள் வந்தால் அந்த கணக்கை நீக்கி விடும் எனவும் தெரிய வந்துள்ளது.