சென்னை:

மிழகத்தில் இருந்து கடத்தப்பட்டு, ஆஸ்திரேலியாவுக்கு சென்ற சிலையை, தமிழக சிலைக் கடத்தல் பிரிவு மீட்டு தமிழகத்துக்கு கொண்டு வந்தது. ஆஸ்திரேலியாவில் இருந்து டில்லிக்கும், டில்லியில் இருந்து  சென்னைக்கும்  ரயில் மூலம் சிலை எடுத்து வரப்பட்டது.

சென்னை வந்தடைந்த நடராஜர் சிலைக்கு ரயில் நிலையில் விசேஷ பூஜை செய்து வரவேற்கப் பட்டது. இந்த நிலையில், சிலை கடத்தல் வழக்கு நடைபெற்று வரும் கும்பகோணம் நீதிமன்றத் துக்கு இன்று எடுத்துச்செல்லப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 1982ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள கோவிலில் திருடு போன ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை ஆஸ்திரேலியா மியூசியத்தில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. . இதை மத்தியஅரசு உதவியுடன் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டு டில்லி கொண்டு வரப்பட்டது.

ஐஜி பொன்மாணிக்க வேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு குழுவினர் சிலையை ரயில் மூலம் சென்னைக்கு எடுத்து வந்தனர்.  இன்று காலை ரயில் சென்னை சென்ட்ரல்  நிலையத்திற்கு வந்தடைந்தது. இதை பொன்மாணிக்க உள்பட அதிகாரிகள் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து நடராஜர் சிலைக்கு விசேஷ அலங்காரம் மற்றும் விஷேச பூஜை செய்து பக்தர்கள் வரவேற்றனர்.