ஏ.எல்.விஜய் இயக்கும் ‘தலைவி’: ஜெ.வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது…

சென்னை:

றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற பெயரில்  இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்க உள்ளார. இந்தபடத்தின்  படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

மறைந்த தமிழக முதல்வரின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க பலர் முன்வந்துள்ள நிலையில், அவரது வாழ்க்கை கதையை ஏ.எல்.விஜய் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை ஜெ. பிறந்தநாளான பிப்ரவரி 24ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாக இருப்பதாகவும், இயக்குனர் எஸ்.எஸ் ராஜ மௌலியின் தந்தையும், பாகுபலி படத்தின் 2 பாகங்களுக்கும் கதை, திரைக்கதை எழுதியவருமான விஜயேந்திர பிரசாத், இந்த படத்தை மேற்பார்வையிடுவார் என்று கூறப்படுகிறது.  படத்திற்கு இசையை ஜி.வி. பிரகாஷ் அமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.