சென்னை ஐஐடி வளாகத்தில் பெண் மர்மச் சாவு

சென்னை

சென்னை ஐஐடி வளாகத்தில் வகுப்பறைகள், அலுவலகங்கள், ஆய்வுகூடங்கள் மட்டுமின்றி மாணவர் தங்கும் விடுதிகளும், ஆசிரியர் குடியிருப்புகளும் உள்ளன. தீவிர பாதுகாப்பு நிறைந்த வளாகத்தினுள் வெளி நபர்கள் நுழைவது என்பது கடினமான செயலாகும்.

இந்நிலையில் பிரம்மபுத்திரா தங்கும் விடுதியின் பின்புறம் முட்புதரில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது வளாகத்தில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சியையும், பாதுகாப்பற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்த காவல்துறையினர் பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த பெண் கொலை செய்யப்பட்டாரா? அவர் எப்படி இறந்தார்?. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.