முட்டைக்கோஸ் வாங்க சென்ற பெண்ணிற்கு ரூ.1.5 கோடி பரிசு

அமெரிக்காவில் முட்டைக்கோஸ் வாங்க சென்ற பெண்ணிற்கு ஜாக்பாட்டில் ரூ.1.5 கோடி பரிசு விழுந்துள்ளது.

அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியை சேர்ந்த வனிசா வார்ட் என்ற பெண் தனது தந்தையுடன் சென்ற போது முட்டைக்கோஸ் வாங்க நினைத்துள்ளார். இதனால், அவரது காரை உணவுப்பொருட்கள் விற்கும் கடை முன்பு நிறுத்தி விட்டு கடைக்குள் சென்றுள்ளார்.

2wr

அங்கு வனிசா முட்டைக்கோசை வாங்கிய பின் பரிசுகள் விழும் ஸ்கிராட்ச் டிக்கெட்டுகளை பார்த்துள்ளார். அதன் மீது ஆர்வம் ஏற்பட்ட வனிசா ஒரு ஸ்க்ராட்ச் டிக்கெட்டை வாங்கி கொண்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அந்த டிக்கெட்டை ஸ்கிராட்ச் செய்து பார்த்ததில் அவருக்கு மிக பெரிய பரிசு ஒன்று காத்திருப்பது தெரிய வந்தது.

’வின் ஏ ஸ்பின்’ எனும் அந்த ஸ்கிராட்ச் டிக்கெட் விளையாட்டின் சக்கரத்தை சுற்றி விட்டால் சுமார் 1,00,000 டாலர் முதல் 5,00,000 அமெரிக்க டாலர் வரை பரிசு பெற கூடிய வாய்ப்பு வனிசாவிற்கு கிடைத்தது. இந்த கேமில் பங்கேற்று சக்கரத்தை சுற்றிவிட்ட வனிசாவிற்கு 2,25,000 டாலர் அதாவது இந்திய ரூபாயில் 1.5 கோடி பரிசு விழுந்துள்ளது.

முட்டைக்கோஸ் வாங்க சென்ற வனிசாவிற்கு ஜாக்பாட் அடித்தது அப்பகுதி மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.