பிலிப்பைன்சில் இளைஞர் ஒருவர் அரிய வகை தோல் நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளார்.   அவரது தோற்றம் அகோரமாக மாறிக்கொண்டிருக்கிறது. இது பார்ப்பதற்கு பேய் போல் காட்சி அளிப்பதாக கூறப்படுகிறது.

பிலிப்பைன்சின் அக்லான் மாகாணத்தை சேர்ந்தவர் அன்டோனியோ ரெலோஜ் (26).

இவருக்குப் பிறக்கும் போதே இச்தியாசிஸ் என்ற தோல் நோய் ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக அவரது  அவரது தோல்கள் தடித்து, வெடித்த நிலையில் காணப்படுகிறது.

இந்த தோல் நோயின் தாக்கத்தால் 26 வயது இளைஞரான இவர், வயதானவர் போன்ற தோற்றத்தை பெற்றுள்ளர்.

நோயின் பாதிப்பு காரணமாக   இவர் கண்கள் பாதிப்படைந்து வித்தியாசமாகவும்,   தலை முடி உதிர்ந்தும் காணப்படுகிறது.

இவரது நோயைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை சிறுவயதிலேயே அனாதையா விட்டுவிட்டு சென்றுவிட்டனர். அவனது பாட்டிதான் அவரை பராமரித்து வருகிறார்.

இதுவரை எத்தனையோ மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் அவரது நோய் குணமாகவில்லை.

இதுபற்றி நோய் பாதிப்புக்குள்ளான  அன்டோனியோ ரெலோஜ் கூறியதாவது,

‘சிறுவயதில் இருந்தே இந்த தோல் நோயால் போராடி வருகிறேன். இதனால் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு மிகுந்த சங்கடமாக இருக்ககிறது. என மன அமைதிக்காக தேவாலயங்கள் மட்டும் செல்வேன் என்றார்.

எனது அருவருப்பான தோற்றத்தைக் கண்டு பலரும் பயப்படுவதாகவும்,  என்னை பேய் மனிதன் என்றும்,  என் உடலில் தீய ஆவி இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

எனக்கும் மற்றவர்கள் போல் வாழ வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் நான்  இந்த நோயால் சபிக்கப்பட்டுள்ளேன்’ என வேதனையோடு கூறினார்.