பீகாரில் 34 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

பீகாரில் 34 சிறுமிகளை பாலியல்வன்கொடுமை செய்த பிரிஜேஷ் தாக்கர் என்ற நபரை காவல்துறை கைது செய்துள்ளது.

பீகாரில் முஸாபர்பூரில் அரசு நிதியுதவியுடன் இயங்கிவந்த தனியார் தொண்டு நிறுவன காப்பகத்தில் சுமார் 7 வயதுமுதல் 17 வயதுடைய 40-க்கும் மேற்பட்ட சிறுமிகள் காப்பக ஊழியர்கள், அதிகாரிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.  இந்த வழக்கு தொடர்பாக பத்துக்கும்  மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் பலரை  காவல்துறையினர்  தேடிவருகின்றனர்.

 

பாலியல் கொடுமை செய்யப்பட்ட சிறுமிகளில் ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் ஜெ.சி.பி இயந்திரத்துடன் புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மீட்கப்ட்ட 21 சிறுமிகளிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 16  சிறுமிகள் பாலியல் கொடுமை செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் மொத்தம் இருதுவரை 44 சிறுமிகள் 34 பேர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில்   6 பெண்கள் உட்பட 10 பேரை காவல்துறையினர் ஏற்கனவே கைது செய்துள்ளனர். இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான  பிரிஜேஷ் தாக்கர் என்கிற நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.