ஏப்ரல் 2ந்தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்… டெல்லி தலைமை அறிவிப்பு

அகில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஏப்ரல் மாதம் 2ந்தேதி, காணொளி காட்சி மூலம் நடைபெறும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் 21 நாட்கள் லாக்டவுன் ( ஊரடங்கு) அமல்படுத்தப்பட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மத்திய மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, முழுமையான பொருளாதார முடக்கத்தால் எற்படும் விளைவு, கோவிட் – 19 வைரஸால் ஏற்படும் உயிரிழப்புகளை விட பேரிழப்பை ஏற்படுத்தும் என்று அச்சம் தெரிவித்து, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் செயற்குழுவின் கூட்டம் ஏப்ரல் 2ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் என்றும், இந்த  கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்படும் என்றும் காங்கிரஸ் தலைமை அறிவித்து உள்ளது.