காஷ்மீர் பள்ளத்தாக்கில் மினி பேருந்து கவிழ்ந்து 17 பேர் பலி
ஸ்ரீநகர்:
காஷ்மீர் கேஸ்வான் என்ற இடத்தில் இருந்து கிஸ்த்வார் என்ற பகுதிக்கு 27 பேருடன் மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து செனாப் என்ற இடத்தில் 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
காயங்களுடன் மீட்கப்பட்ட மேலும் 6 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முன்னாள் முதல்வர் மெகாபூபா முப்தி இரங்கல் தெரிவித்துள்ளார். கிஷ்ட்வார் பகுதியில் இந்த மாதத்தில் நடந்த 3-வது மிகப்பெரிய விபத்தாகும்.