தன்னந்தனியாக 1400 கிமீ பயணித்து மகனை அழைத்து வந்த துணிச்சலான தாய்…

ஹைதராபாத்

ஊரடங்கு காரணமாக  நண்பன் வீட்டில் முடங்கியிருந்த மகனை 1400 கிமீ பயணித்து தாய் அழைத்து வந்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில், போதா நகரில் வசித்து வருபவர் ஆசிரியர் ரசியா பேகம்(50). அவரின் இளைய மகன் நிசாமுதீன், மருத்துவ மாணவர். மார்ச் 12 ஆம் நாள் நெல்லூர் மாவட்டம், ரஹ்மதாபாத்தில் உள்ள நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 25 முதல் நாடு முழுதும் பிரதமர் ஊரடங்கை அறிவித்தார். இதனால் போக்குவரத்து முழுதும் நிறுத்தப்பட்டதால் தனது அம்மா ரசியாவிற்கு தகவல் தெரிவித்தார்.

காவல் துறையினர் அனுமதி பெற்று மார்ச் 6 அன்று தன்னந்தனியாக 1400 கிமீ ஸ்கூட்டரில் பயணித்து மகனை அங்கிருந்து இரண்டு நாட்களில் பாதுகாப்பாக வீட்டிற்கு தாய் ரசியா அழைத்த வந்தார்.

இந்நிகழ்வு நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. ரசியாவின் துணிச்சலையும், அன்பையும் பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி மகிழ்கின்றனர்.