ஹரியானாவில் சாலை விபத்தில் இறப்போர் விவரத்தை மறைத்து மோசடி செய்யும் காப்பீட்டு நிறுவனங்கள்

சண்டிகார்:

சாலை விபத்துகளில் இறப்போர் விவரத்தை காப்பீட்டு நிறுவனங்கள் மறைத்து மோசடி செய்வதாக ஹரியானா மாநிலத்தில் புகார் எழுந்துள்ளது.


ஹரியானா மாநிலத்தில் சாலை விபத்துகளில் இறப்போரின் உறவினர்கள் புகார் கொடுக்கின்றனர்.
போலீஸ் நிலையங்களில் வழக்கு பதியப்படுகிறது. ஆனால், ஆதாரத்துடன் இந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி தங்கள் உறவினர் இறந்தார் என்று குறிப்பிட்டும் அதனை போலீஸார் கண்டுகொள்வதில்லை.

நோய், வறுமை மற்றும் விரக்தியால் இறந்தார்கள் என்றே வழக்கு பதியப்பட்டு, பெரும் மோசடி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அஜீத் சிங் என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி கார் மோதி இறந்தார்.கார் டிரைவரின்  அலட்சியப் போக்கால் இந்த விபத்து நடந்ததாக, இறந்தவரின் உறவினர்கள் ஆதாரத்துடன்  தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பேருந்தில் ஏறும்போது தவறி விழுந்ததாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதேபோல் இந்தியாவில் ஓவ்வொரு ஆண்டும் குறைந்தது 1,50,000 பேர் விபத்தில் இறக்கிறார்கள்.
அஜீத்சிங்கிற்கு ஏற்பட்டது போல இயற்கையான மரணமாக மாற்றிவிடுகின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் டாக்டர்கள் போலீஸ் ஸடேஷனை அணுகும் போது, யாரும் பொறுப்பாக பதில் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

சாலை விபத்துகளின் இறந்ததற்கான ஆதாரத்தை கொடுத்தும், இதில் சந்தேகம் இருப்பதாக காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக காப்பீட்டு நிறுவனங்கள் பெரும் மோசடியில் ஈடுபடுவதாகவும் கூறுகிறார்கள்.