பறவைகளுக்காக பிரத்யேக பலமாடி ஃபிளாட்! காசியாபாத் நிர்வாகம் அசத்தல்

காசியாபாத்:

றவைகளுக்காக பிரத்யேக பலமாடி ஃபிளாட் கட்டி வருகிறது காசியாபாத் நிர்வாகம். இது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மனிதன் காடுகளை அழித்து கட்டிடங்களாக மாற்றி வரும் நிலையில், காடுகளை உறைவிடமாக கொண்டுள்ள பறவைகள் வாழ்வாதாரம் தேடி பல இடங்களை தேடி அலைகிறது. இந்த நிலையில்,  காசியாபாத்தில் பறவைகளுக்காக முதல்முறையாக பிளாட் காலனி உருவாகி வருகிறது.

காசியாபாத் மேம்பாட்டுஆணையம் சார்பில்,  சிறிய பறவைகளுக்கு பாதுகாப்பான வாழ்விடத்தை வழங்குவதற்கான ஒரு தனித்துவமான முயற்சியாக, ஆணைத்தின் துணைத் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 60 அலகுகளை கொண்ட பறவை-பிளாட் ஒன்றை அமைக்கப்பட்டு உள்ளது..

இது குறித்து கூறிய மாவட்ட அதிகாரிகள், பறவைகளுக்கான சிறிய வீடுகளைக் கொண்ட பல மாடி பறவை பிளாட் இரும்பு கம்பத்தில் கட்டப்பட்டுள்ளதாகவும், அது குடை வடிவ கவர் மூலம் பாதுகாக்கப்படுகிறது என்றவர்,  அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்களிடையே இயற்கை யோடு நெருக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் இது கட்டப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

இதற்காக ரூ.2 லட்சம் செலவாகி உள்ளதாக தெரிவித்த அதிகாரிகள்,  தனியார் கட்டடதாரர்கள் தங்கள் கட்டிடங்களிலும்,  இதுபோன்ற ஒரு கட்டமைப்பை கட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

இதுபோன்ற கட்டமைப்பு, நீர்வளத்துடன், உணவு வசதிகளும் செய்யப்பட்டு உள்ளதாகவும்,  பூனை கள் மற்றும் நாய்களிடமிருந்து பறவைகளைப் பாதுகாக்க இரும்பு கம்பம் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.