நொய்டா

காய்கறி வாங்க ரூ.30 கேட்ட மனைவியை நடுத்தெருவில் அடித்து முத்தலாக் அளித்துள கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நொய்டா நாரில் வசித்து வரும் 32 வயது இளைஞர் சபிர். இவர் மனைவி ஜைனப் 30 வயதானவர். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளன. இவர்கள் இருவருக்கும் திரும்ணம் நடந்ததில் இருந்தே மனக்கசப்பு இருந்து வருகிறது. அடிக்கை சண்டை வந்து சபிர் அடித்தடி தாக்குதல் நடத்துவது வழக்கம்.

சபீருக்கு அவருடைய பெற்றோர்களும் மனைவியிடம் இவ்வாறு நடந்துக் கொள்ள ஆதரவு அளித்துள்ளனர்.  எண்ணெய் கேன்கள் விற்று வரும் சபிர் இரு வருடங்கள் முன்பு மனைவியை சண்டையின் போது ஒரு குச்சியால் அடித்து மண்டையை உடைத்துள்ளார். அதன் பிறகு அவர் தனது தாய் வீட்டில் சிகிச்சை பெற்றுக் கொண்டு வீடு திரும்பி உள்ளார். அவரிடம் புகுந்த வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் கொடுமையாக நடந்துக் கொண்டுள்ளனர்.

நொய்டாவில் உள்ள ராவுஜி மார்க்கெட் பகுதியில் சபீரிடம் ஜைனாப் காய்கறி வாங்க ரூ.30 கேட்டுள்ளார். அப்போது சபீரின் தாயும் உடன் இருந்துள்ளார். பணத்தை தர மறுத்த சபீர் மனைவியுடன் சண்டை இட்டுள்ளார். அப்போது அவரிடம் மூன்று முறை தலாக் என கூறி உள்ளார். உடனடியாக ஜைனப் இன் மாமியார் அவர் காதில் இருந்த தோட்டை கழற்ற முயன்றுள்ளார். அதை ஜைனப் தர மறுத்துள்ளார். அவரை ஒரு ஸ்குரு டிரைவர் கொண்டு சபீர் தாக்கி உள்ளார்.

இது நடுத் தெருவில் நடந்துள்ளது. அங்கிருந்தவர்கள் ஓடி வந்து ஜைனப்பை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர். தற்போது ஜைனப் தனது தாய் வீட்டில் இருக்கிறார். ஜைனப் தந்தை, “சபீர் மீது முத்தலாக் கூறிய குற்றசாட்டுக்கான ரசீது என்னிடம் உள்ளது. எனவே அவர் உச்சநீதிமன்றத்தில் ஒப்படைக்கபட்டு தண்டனை அளிக்க வேண்டும்” என கூறி உள்ளார்.