ஆகாயத்தில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் பிரமோஸ் சூப்பா்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி! 

ந்திய கடற்படைக்கு சொந்தமான பிரமோஸ் சூப்பா்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. கடற்படையில் உள்ள இந்திய விமானப் படைக்கு வலு சேர்க்கும் வகையில், வானில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் பிரமோஸ் சூப்பா்சோனிக் ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

இந்த பிரமோஸ் ஏவுகணை சோதனை, தமிழகத்தின் தஞ்சையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்திய விமானப் படைத் தளத்துக்குச் சொந்தமான எஸ்யூ-30 எம்கேஐ விமானம், பஞ்சாபில் உள்ள படைத்தளத்தில் இருந்து இயக்கப்பட்டது.  இந்த ஏவுகனையுடன் கடற்படையைச் சேர்ந்த விமானப்படை விமானம் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக ஆகாயத்தில் பயணித்து தொலைதூரம் சென்று அங்கிருந்து தரையில் உள்ள இலக்கை நோக்கி  ஏவுகணை செலுத்தப்பட்டது.

அரேபிய கடலில் இந்திய கடற்படையின் உள்ள விமானத்தின் மூலம் செலுத்தப்பட்ட இந்த பிரமோஸ் சூப்பா்சோனிக் ஏவுகணை வங்கக் கடலில் இருந்ததுல்லியமாகத் தாக்கி அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்திய விமானப் படை கடந்த ஆண்டு மே மாதம் முதல்முறையாக வானில் இருந்து பிரமோஸ் ஏவுகணையை செலுத்தி  வெற்றிகரமாக சோதனை நடத்தியது.  இந்த ஏவுகணை நிலத்திலோ, கடலிலோ தொலைதூரத்தில் உள்ள இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்க வல்லது. இந்த ஏவுகணையை பகல், இரவு என இருவேளைகளிலும் இலக்கை நோக்கி செலுத்த முடியும். மோசமான வானிலையிலும் இலக்கைத் தாக்கி அழிக்கும்.

இந்திய விமானப் படையின் போா் திறனை அதிகரிக்கும் நோக்கில் 40-க்கும் மேற்பட்ட சுகோய் போா் விமானங்களில் பிரமோஸ் சூப்பா்சோனிக் ஏவுகணைகளை ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்தியா- ரஷ்யாவின் கூட்டு நிறுவனமான BrahMos Aerospace, இந்த ஏவுகணையை தயாரித்துள்ளது.

நீர்மூழ்கிக் கப்பல்கள், கப்பல்கள், விமானங்கள், நிலங்கள் உள்ளிட்ட தளங்களில் இருந்து இந்த ஏவுகணையை ஏவ முடியும்.  இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு சுகோய்- 30MKI போர் விமானங்களில் இருந்து இதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  சமீபத்தில் செப்டம்பர் மாதம் இறுதியில் 400 கி.மீ தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்ட  பிரமோஸ் ஏவுகணை . சோதனை நடததப்பட்டது.  இது Mach 2.8 என்ற வேகத்தில் பயணிக்கக் கூடியது. இது ஒலியை விட வேகமாக செல்லும் திறன் வாய்ந்தது. இந்த ஏவுகணையின் சோதனை இன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. ஒடிசாவின் பாலசோரில் டிஆர்டிஓ சார்பில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

உலகிலேயே கடற்படை, விமானப் படை, தரைப்படை ஆகிய மூன்றுமே சூப்பர்சானிக் ஏவுகணை (ப்ரமோஸ்) கொண்ட ஒரே நாடு இந்தியா. இந்த ஏவுகணை உருவாக்கும் முயற்சியை இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் தொடங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.