விஜய்சேதுபதியுடன் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் இணையும் மஞ்சிமா மோகன்…!

விஜய்சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் என்னும் புதிய படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை மஞ்சிமா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார்.

டில்லி பிரசாத் தீனதயாளன் இயக்கும் துக்ளக் தர்பார் படத்தில் நடிகர் பார்த்திபன் நடிகை அதிதி ராவ் ஹைதிரி ஆகியோர் நடிக்கும் இந்த படத்தில் மஞ்சிமா மோகன் ஒரு முக்கிய கதாபாதிரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிப்பது உற்சாகம் அளிப்பதாகச் சொல்கிறார் மஞ்சிமா.

“‘துக்ளக் தர்பார்’ படத்தின் கதையை இயக்குநர் விவரித்த விதம் எனக்குப் பிடித்திருந்தது. நடிக்க வந்த நாள் முதல் இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.பெரிய காத்திருப்புக்குப் பிறகு கிடைத்த வேடம் இது. அதனால் சிறப்பான நடிப்பை வழங்க விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் குறிப்பாக விஜய் சேதுபதி எவ்வளவு திறமை வாய்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால்தான் அவருடன் இணைந்து நடிப்பது சவாலானது என்று கூறுகிறேன். இந்தப் படம் எனக்கு நல்ல அனுபவங்களைத் தரும் என்ற
நம்பிக்கை உள்ளது,” என்கிறார் மஞ்சிமா.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Aditi Rao Hydari, manjima mohan, Tughlaq Darbar, vijay sethupathi!
-=-